20நாமக்கல் கவிஞர் பாடல்கள்


தூய அன்புக் காதலைத்
       துலங்க வைக்கும் ஜோதியான்
நேய மாகும் கண்ணனை
       நிந்தை நீக்கி எண்ணுவோம்.       (கண்)5

என்றும் என்றும் பாலனாய்
       இன்பக் கேலி லோலனாய்க்
கன்று காலி மேய்ப்பதில்
       களித்து லோகம் காப்பவன்.       (கண்)6

புலனை வெல்லும் கீதையைப்
       புகலும் கண்ணன் மேதையை
நலனி லாத காமியாய்
       நாம்நி னைத்தல் தீமையாம்.       (கண்)7

ஆண்மை என்ற வன்மையும்
       அன்புப் பெண்மை மென்மையும்
மாண்பிற் சேர்ந்த வேலையே
       மாயக் கண்ணன் லீலையே.       (கண்)8

8. எங்கள் கண்ணன்

கண்ணன் என்றுஒரு சிறுவன் - என்
       கருத்தைக் கொள்ளைகொண்ட ஒருவன்
எண்ண எண்ண அவன்பெருமை - தனை
       என்ன சொல்லுவேன் அருமை! 1

சிறுவன் என்றுநினை யாமல் - அவன்
       செயலைக் கூர்ந்துநினைப் போமேல்
திறமை யோடுசெயல் புரியும் - நல்ல
       தீரம் நம்மனதில் விரியும்.       2

அன்பு என்றஒரு எண்ணம் - தரும்
       அழகு வடிவமே கண்ணன்
துன்பம் நேருகிற போது - எண்ணித்
       துயரம் தீரஒரு தோது.       3