சூது போலப்பல புரிவான் - உலகச் சூதை வெல்லவழி தருவான் தீது போலஒன்று செய்வான் - அதில் திகழும் நன்மைபல செய்வான். 4ஆணின் அழகுமிக வருவான் - பெண்கள் ஆவிசோர மயல் தருவான். நாணிப் பெண்அருகில் செல்வான் - அவன் நகைத்துப் பெண்வடிவு கொள்வான். 5 பெண்ணின் வடிவழகில் வந்தே - ஆண்கள் பித்து கொள்ள மயல்தந்து கண்ணைச் சிமிட்டுவதற் குள்ளே - ஒரு காளை ஆண்வடிவு கொள்வான். 6 தாயைப் போல்எடுத்தே அணைப்பான் - உடனே தந்தை போற்கடிந்து பணிப்பான் மாயக் காரமணி வண்ணன் - வெகு மகிமைக் காரன்எங்கள் கண்ணன்.7 கலகப் பேச்சும் அவன்வேலை - மாற்றும் கருணை வீச்சும்அவன் லீலை உலகம் முழுதும் அவன் ஜாலம் - அதை உணர்ந்து கொள்வதே சீலம்.8 9. ஆயன்கண்ணன் கண்ணன் உறவைப் பிரியாதே காரியம் இன்றித் திரியாதே எண்ணம் தூயது என்றானால் எதுசெய் தாலும் நன்றாகும். 1 ஊக்கமும் உறுதியும் உண்டாகும் உழைப்பிலும் களைப்பெதும் அண்டாதே. ஆக்கமும் ஆற்றலும் பெறலாகும் ஆயன் கண்ணன் உறவாலே. 2
|