கல்வியில் தேறிச் சிறந்திடலாம் கலைகளின் ரசனை நிறைந்திடலாம்; பல்வித நன்மைகள் பெறலாகும்; பாலன் கண்ணன் உறவாலே. 8 பண்ணும் காரியம் முற்றிலுமே பழுதில் லாமல் வெற்றி பெறும் கண்ணன் திருவருள் சூழ்ந்திடுவோம்; கவலையில் லாமல் வாழ்ந்திடுவோம். 9 குறிப்புரை:- லோலன் - உலகை நடத்தும் கண்ணன். 11. வடிவேல் முருகா வாவா முருகா! வடிவேல் முருகா! காவாய் முருகா! கடிதே முருகா! தேவா உனையே தினமும் தொழுவேன் தீவாய் பிணியைத் தீரித் தினமே. 1 அழியா அழகா! அறிவாம் முருகா! கழியா இளமைக் கடலே முருகா! மொழியா இன்பம் அடையும் முறையை ஒளியா தருள்வாய் ஒருவா முருகா! 2 குறையா அழகே! குமரா முருகா! மறையா வையம் அறியா ஒருவா! சிறைவா யுலகில் சிறுகும் எளியேன் சிறுகா விதமுன் திறமே தருவாய்! 3 தளரா உடலும் சலியா உயிரும் குளரா உரையும் குறையா அறிவும் வளரா வாடா வடிவம் உடையாய்! எளியாய்! அடியார்க் களியே! ஒளியே! 4 நரையும் திரையும் நணுகா முருகா! கரையும் பிணியும் களையொன் றறியாய் விரியும் உலகின் விரையே முருகா! வருவாய் முருகா! வரமே தருவாய்! 5
|