266நாமக்கல் கவிஞர் பாடல்கள்

அன்னிய ரெத்தனை வந்தா லும்மிக்க
       அன்புடன் கொண்டு விருந்த ளிக்கும்
கண்ணிய மான குடியிற் பிறந்து நாம்
       கஞ்சியு மற்றுக் கதறுகின்றோம்!       17

அன்னக் கொடிகள் பறந்து விருந்திடும்
       ஆசார வாசலின் வீதியடி!
பின்னக் கழுதையும் பேயும் குடிகொள்ளப்
       பெண்மணி யேஎன்ன காலமடி!       18

வெண்ணெயும் பாலும் பெருகி வழிந்திடும்
       பண்ணைய மெங்களின் பண்ணையடி!
தண்ணீரு மின்றித் தயங்கத் தரித்திரம்
       தங்குத டிமனம் பொங்குதடி!       19

நெல்லுங் குலமணிக் கல்லு முதிர்ந்திடும்
       கொல்லைய டியெங்கள் கொல்லையடி!
கல்லுங் காட்டொடு காடுமே டாயிப்போ
       காணுத டிமனம் நாணுதடி!       20

கோடானு கோடி குடித்தனக் காரரின்
       கூட்டமடி யெங்கள் கூட்டமடி!
நாடோடி யாகி நடுத்தெரு வில்நின்று
       நாமும் புலம்பிடும் ஞாய மென்ன?       21

கண்ணும் மனமும் கருத்துங்கொண் டமட்டும்
       காணும டியெங்கள் காணியடி
கண்ணும் மனமும் கருத்துஞ் சுழன்றிடக்
       கஞ்சியற் றோமடி வஞ்சியரே!       22

மன்னருள் மன்னரும் வந்து வணங்கிடும்
       மன்னவர் மன்னரின் மைந்தரடி!
சின்னஞ்சி றுவரும் நின்று சிரித்திடச்
       செய்வினை என்னடி சேடியரே!       23