நீதியும் நல்ல நெறிமுறை யுங்கொண்ட ஜாதியடி எங்கள் ஜாதியடி! நீதியும் நின்ற நெறிமுறை யுங்கெட்ட நிந்தனை யென்னடி சுந்தரியே! 24 மானம் பெரிதென்று பிராணனை விட்டுயர் மாட்சிமை கொண்டவர் மைந்தரடி! மானத்தை விற்று வயிற்றை வளர்த்திடும் மாயமு மென்னடி சேயிழையே! 25 வெள்ளியும் பொன்னும் விரிந்து கிடந்தொளி வீசுமடி எங்கள் வாசலிலே! கள்ளியும் முள்ளும் கலந்து முளைத்திப்போ காட்டுத டிமனம் வாட்டுதடி! 26 முத்தும் பவளமும் சிந்திக் கிடந்திட்ட முற்றமடி யெங்கள் முற்றமடி! சொத்தைப் பணத்திற்கும் செல்லாத காசுக்கும் சோருதடி மனங் கோருதடி. 27 போரொடு நின்று புகழோ டிறந்திட்ட தீரர் வழிவந்த தீரரடி! தேரொடு நின்று தெருவோ டிலைந்திடத் தேற்றமு மென்னடிக் கோற்றொடியே. 28 இல்லையென் றோர்களுக்(கு) அள்ளிக் கொடுத்திட்ட வள்ளல் வழிவந்த வள்ளலடி இல்லையில் லையில்லை யில்லையில் லையென்று பல்லை இளிக்கிறோம் பாருங்கடி! 29 பார்த்த திசையெங்கும் பச்சைப்ப சேலென்று பார்க்கும டியெங்கள் பாளையத்தில் பார்த்த திசையெங்கும் நீத்துக் கிடக்குது பாவமு மென்னடி பூவையரே! 30 |