எப்படியோ வெள்ளையர்கள் எதிர்த்து நின்றார் இந்தியரின் துணைகொண்டே இதனை வென்றார். அப்படியாய் எழுச்சிகளை அடக்கும் போதும் ஆங்கிலர்கள் செய்திட்ட அநியா யங்கள் எப்பொழுதும் அவரினத்தை நாணச் செய்யும்; எங்கெங்கும் நாகரிகம் ஏசிக் கூசும்; தப்பறியாப் பெண்களையும் தூக்கி லிட்டார் தாயோடு சிசுக்களையும் தகித்துக் கொன்றார். 13குடுகுடுத்த கிழவரையும் குத்திக் கொன்றார்; குற்றமற்ற பேர்களையும் சுட்டுத் தள்ளிப் பிடிகிடைத்த வீரர்களைப் பிணைத்துக் கட்டிப் பீரங்கி வாயில்வைத்துப் பிளந்திட் டார்கள்; கடுகடுத்திங் கிதற்கீடாய்க் கான்பூர் தன்னில் காப்பளிக்கப் பட்டவெள்ளைக் காரப் பெண்கள் நடுநடுங்கச் சிசுக்களுடன் நசுக்கப் பட்டார் நாணாவின் ஆட்களினால் நாணம் எஞ்ச 14 அதன்பிறகும் ஆங்கிலர்கள் வெறிகொண் டார்கள்; அரக்கரினும் கொடுமைகளை அதிகம் செய்தார்; மதங்கொண்ட யானையைப்போல் சுற்றிச் சுற்றி மக்கள்தமைக் கண்டபடி வதைத்திட் டார்கள்; அதம்செய்தும் ஊர்களுக்கு அளவிட் டார்கள். அபயமென்ற பேர்களையும் அழித்திட் டார்கள்; இதம்கண்டார் துரைத்தனத்தார் இங்கி லாந்தில் எப்படிச்செய் தாலும்சரி என்றிட் டார்கள். 15 வித்தகி அப்பெண்ணரசி வீரருக்குள் வீரர்களும் வியந்து போற்றும் வித்தகிஅப் பெண்ணரசி ஜான்சி ராணி போரகத்துக் குதிரையின்மேல் போகும் போது புல்லியர்தம் குண்டுபட்டு மாண்டு போனாள்; |