282நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஆரணங்கு பதியிழந்த அயோத்தி பீகம்;
       அவளுடனே பிரேஸ்ஷாவும், நானா சாகிப்,
ஊரிலுள்ள ஒருவருக்கும் தெரியா வண்ணம்
       ஓடிவிட்டார் நாட்டைவிட்டே உயிருக் காக.       16

போனசொத்து மறுபடியும் தருவா ரென்றும்
       புரட்சிகளில் சேர்ந்ததனைப் பொறுப்பா ரென்றும்,
மானமற்ற துரோகிஒரு மான்சிங் கென்பான்
       மனமாரத் தன்னைநம்பி மறைந்து வாழத்
தானனைத்த தாண்டியா தோப்பி தன்னைத்
       தந்திரமாய் வெள்ளையர்க்குக் காட்டித் தந்தான்;
ஈனமிக்க உதவிசெய்த இவனைக் கூட
       இரக்கமின்றித் தூக்கிலிட்டார் இங்கி லீஷார்.       17

அப்படியவ் விடுதலைப்போர் அடங்கி னாலும்
       அதிலுதித்த சுதந்தரத்தின் ஆர்வந் தானே
எப்பொழுதும் குறையாமல் இருந்தே வந்தி்ங்
       கிந்தியரின் தேசபக்தி இறுகச் செய்தும்
ஒப்பரிய காந்திமகான் சாந்தப் போரில்
       உறுதியுடன் ஒத்துழைக்க ஊக்கம் தந்தும்
இப்பொழுதும் இங்கிருக்கும் சுதந்த ரத்தின்
       இன்பத்தை நாமடையச் செய்த தென்போம்.       18

ஆகையினால் சுதந்தரத்தில் ஆர்வம் பொங்க
       ஆயித்தெண் நூற்றைம்பத் தேழா மாண்டில்
வேகமுடன் வெள்ளையரை எதிர்த்தெ ழுந்து
       விடுதலைக்கு விதைவிதைத்த வீரர்க் கெல்லாம்
வாகையுடன் புகழ்மாலை வணங்கிச் சூட்டி,
       வாயார இந்தியத்தாய் வாழ்த்துப் பாடி
ஓகையுடன் இந்நாட்டு மக்க ளுக்குள்
       ஒற்றுமையே உறுதிபெற உழைப்போம் வாரீர்.       19

அப்பெரிய மகிழ்ச்சியிடை மறந்தி டாமல்
அதற்கு முன்னால் ஆயிரத்தெண் ணூற்றா றாண்டில்