288நாமக்கல் கவிஞர் பாடல்கள்

இந்தியா திரும்பி வந்தார் - சொந்த
இந்நாட்டின் விடுதலைக் குழைத்திடவே
சபர்மதி ஆசிரமத்தை - ஏற்படுத்தி
சத்யாக்ர கப்பயிரை வளர்த்துவந்தார்.
சம்பரான் ஜில்லாவினிலே - அவுரிச்
சாகுபடி கூலிகளைத் தாங்கி யுழைத்தார்.
கெய்ரா ஜில்லாவினிலே - விளைவு
கெட்டவர்க்கு நிலவரி விட்டிடச் செய்தார்.
ஜெர்மன் சண்டைவரக் - காந்தி
சேனையும்பண மும்மிகச் சேர்த்துக் கொடுத்தார்.       60

நன்றியை நினைப்பார்கள் - இந்த
நாட்டுக்கொரு நல்லவழி பிறக்கு மென்றே
நம்பியிருந் தார்காந்தி - ரௌலட்
சட்டங்களால் இந்தியரை நசுக்க எண்ணம்
கொண்டதைக் கண்டபின்னர் - இதுவரை
கொண்டிருந்த நம்பிக்கை முற்றுந் துறந்தார்.
சாத்வீகப் போர்தொடுக்க - ஜனங்களைச்
சத்திய மெடுத்துக்கொள்ளப் புத்தி புகன்றார்.
பற்பல இடங்களிலே - வெகு
பரபரப் புடன்மக்கள் பதைத்தெழுந்தார்.       65

நாடெங்கும் கூக்குரலும் - பஞ்சாப்
நாட்டிற்சில பேர்புரிந்த பதற்றங்களும்
‘டய‘ரென் றொருபாவி - அன்று
ஜலியன்வா லாவிற்சுட்ட சங்கதியும்
ராணுவச் சட்ட அமலும் - இந்த
நாட்டிற் பிறந்தவர்கள் மறப்பாரோ?
கிலாபாத் விஷயத்திலும் - ஆங்கிலரால்
கிடைத்திருந்த வாக்குறுதி தவறியதால்
ஒத்துழைப் பினிமேலே - சிறிதும்
உதவா தென்றுமனம் உறுதிகொண்டார்.       70