கல்கத்தா விற்கூடிய - விசேஷக் காங்கிரசின் ஒத்துழையாத் தீர்மானம் நாட்டுக்கொரு புத்துணர்ச்சி - தந்து நல்லபல வேலைகளும் நடக்கையிலே சௌரிசாரா வென்னுமிடத்தில் - வெறிகொண்ட ஜனம்சிலர் போலீசுக் கச்சேரிக்குத் தீயிட்டுக் கொளுத்தியதில் - உள்ளே சிக்கிய இருபத்தொரு பேரும்மாண்டார். கேட்டார் இதைக் காந்தி - இயக்கம் கெட்டுவிட்ட தென்றுகண்டு சட்டமறுப்பைத் 75 தாமே நிறுத்தி விட்டார் - அந்தத் தகைமையை உலகுஎங்கும் புகழும் அன்றோ? சிலநாள் சென்றதன்பின் - காந்தியைச் சிறைபிடித்தார் குற்றப் பொறுப்பையெல்லாம் தம்மேல் ஒப்புக்கொண்டே - அதற்குத் தண்டனையா றுவருடம் கொண்டுசிறையில் இரண்டு வருடமிருந்தார் - குடலில் ஏற்பட்ட நோயினுக்குச் சிகிச்சைசெய்து விடுதலை செய்தார்கள் - பிறகு வெகுநாள் நிர்மாண வேலைகள் செய்தே 80 காங்கிரசைப் பலப்படுத்திக் குடிசைக் கைராட்டைத் தொழில்எங்கும் பரவச் செய்தார். முகம்மது அலியின் வீட்டில் - இந்து முஸ்லிம்களின் ஒற்றுமைக்குப் பட்டினிகொண்டார். ஆறுவருடம் பொறுத்தார் - நாட்டின் அடிமைத் தனங்குறைய ஆள்வோர்க்கே எண்ணமில்லை யென்று கண்டு - வைசிராய் இர்வினுக்குத் தம்முடைய எண்ணமெழுதிச் சத்தியப் போர்தொடுத்தார் - உப்புச் சட்டத்தை மறுத்திடுவ(து) என்று ‘டாண்டி‘க்குப் 85 10 நா.க.பா. பூ.வெ. எ. 489 |