புலவர் சிவ. கன்னியப்பன் 339

இலக்கண உயர்வில் சொல்லின்
       இனிமையில் பொருளில் வாழ்வின்
விலக்குகள் விதிகள் வைக்கும்
       விதத்தினில் விநயம் தன்னில்,
கலைக்கொடு தனிமை காட்டும்
       கவிதையின் கனிவில் கற்றோர்
தலைகொளும் தமிழைப் போற்றி
       நம்நாடு புதுமை தாங்கும்.       3

எந்தநாட் டெவர்வந் தாலும்
       எம்மொழி பேசி னாலும்
சொந்தநாட் டவர்போ லிங்குச்
       சுகித்துநிம் மதியாய் வாழத்
தந்தநாடுலகில் இந்தச்
       தமிழகம் போல்ஒன்(று) உண்டோ?
அந்தநம் புகழைக் காத்து
       நம்நாடு அன்பே ஆற்றும்.       4

அன்பினால் கலந்து வாழ்ந்தே
       ‘ஆரியன்‘ ‘அயலான்‘ என்னும்
வன்புஎலாம் வரும்முன் னாலே
       வள்ளளார் வளர்த்த வாய்மை
என்பெருந் தமிழால் இந்த
       இருநில மக்கட்கு எல்லாம்
இன்பமே தருவ தாக
       நம்நாடே இசைக்க வேண்டும்.       5

அன்னியம் அறிவிற்கு இல்லை
       அன்பிற்கும் அளவே இல்லை
என்னவே உலகில் மற்ற
       எவரெவர் மொழியும் ஆய்ந்து