340நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தன்னொடும் வாழ வைத்த
       தமிழ்மொழி பெருமை தாங்கி
நன்னெறி விளக்காய் நின்று
       நம்நாடு நலமே நல்கும்.       6

புதுத்துறை அறிவைத் தேடிப்
       போய்அலைந்(து) உழன்று நாடி
விதப்பல விஞ்ஞா னத்தை
       விரித்திடும் மெய்ஞ்ஞா னத்தால்
பொதுப்படக் கலைகள் எல்லாம்
       தமிழிலே புதுமை பூண
மதிப்பொடே எவரும் போற்ற
       நம்நாடு மணக்க வேண்டும்.       7

213. இந்தியத் தாய் புலம்பல்

காலக் கதியடியோ
       கைவிரித்து நான்புலம்ப
ஆலம் விதையெனவே
       அளவிறந்த மக்கள்போற்றும்
ஞாலத்தில் என்னைப்போல்
       தவித்தால் ஒருத்தியுண்டோ?
நீலக் கடலுலகில்
       நீடித்தும் பிள்ளைகளால்
கோலம் இழந்துநிலை
       குலைந்துருகி வாடுகின்றேன்!       1

மெத்தப் பகட்டுடையாள்
       மேற்கத்திப் பெண்ணொருத்தி
‘அத்தை‘யெனக் கூவியென்றன்
       ஆசார வாசலிலே
தத்தித் தடுமாறித்
       தலைவணங்கி நின்றிருந்தாள்.