"முன்னம் உனைப்பிரிந்து மேல்நாடு மேவினவன் அன்னவன் புத்திரிநான் அத்தைநீ சித்தம்" என்றாள். 5"நெஞ்சம் கலங்காதே நீயெதற்கும் அஞ்சாதே தஞ்சம் உனக்கிருப்பேன் தையலே மெய்யிதுகாண்; கொஞ்சம் இளமையினில் குறையுனக்கு வந்ததென்ன? பஞ்சை எனத்தனியே பட்டணத்தை விட்டுவந்தாய் வஞ்சி இளங்கொடியே வந்துபசி யாறுகஎன்"றேன். 6 சற்றுத் தலைநிமர்ந்தாள் தையலவள் புன்சிரிப்பை உள்ள முகத்தினொடும் உள்ளம் குளிர்ந்தவள்போல் சுற்றி அயல்பார்த்துச் சொன்னபடி என்னுடனே முற்றம் அதனைவிட்டு முன்கட்டில் வந்துநின்று தத்தியதன் மேல்நடக்கத் தயங்கினவள் போலநின்றான். 7 "தாவில்லை உள்ளேநீ தாராள மாய்வரலாம் வா"என்று சொன்னவுடன் வல்லியவள் மெல்லவந்தாள்; தூவெள்ளை யானஅவள் துணியும் அணியிழந்தும் |