தாவள்ய மானஅந்தத் தையலவள் மெய்யழகில் கோவென்று கூட்டமிட்(டு)என் குழந்தைமார் கூடிவிட்டார். 8 ஆனபடி என்னுடனே அன்னம் அந்தக் கன்னிவர மேனியவள் ஆடையெல்லாம் வாடையொன்று வீசியது. "ஏனிஃது இளங்கொடியே! என்ன?" என்று கேட்டதற்கு "மீனுணவும் ஊனுணவும் மெத்தஉண்ட தந்தையரே தேனுங் கனிகாய்என் தேசத்தில் கொஞ்சம்" என்றாள். 9 சொல்லி முகஞ்சுளித்தாள் சோக மதைமாற்றி கொல்லைச் சிறுவீட்டில் கொண்டவளைச் சென்றிருத்தி மல்லிகை முல்லைமலர் மணமிகுந்த நன்னீரால் அல்லி நிறந்தவளை அங்கம்எல்லாம் நீராட்டி மெல்லத் துவட்டிவிட்டு மெய்யழகு செய்துவைத்து. 10 தக்க உடைகொடுத்து டாக்காவின் சல்லாவால் மிக்க விலையுயர்ந்து மிகமெலிந்த ஆடையினால் ஒக்க அவளைமிக ஒய்யாரம் செய்துவிட்டுப் |