344நாமக்கல் கவிஞர் பாடல்கள்

பக்கம் உடனிருத்திப்
       பரிந்தே விருந்துமிட்டேன்
துக்கம்மிக ஆறியவள்
       துதித்தாள் மிகவும் என்னை.       11

என்னுடைய மக்களுடன்
       என்வீட்டுத் தாதியரும்
இன்னும் பணியாட்கள்
       எல்லோரும் பக்தியுடன்
என்ன சிறுகுறையும்
       ஏதும்அவட்(கு) இல்லாமல்
சொன்னபடி எல்லாரும்
       சோடாச உபசாரம்
பண்ணியந்தப் பெண்மணியைப்
       பார்த்து வந்தார் நேர்த்தியுடன்.       12

அஞ்சி அடக்கமுடன்
       அத்தையென்ற பக்தியுடன்
வஞ்சி இளங்கொடியாள்
       வாழ்ந்திருந்தாள் வீட்டில்என்றன்
குஞ்சு குழந்தையெல்லாம்
       கோதையவள் தன்னிடத்தில்
கொஞ்சி விளையாடிக்
       குலவி மகிழ்ந்திருந்தார்.
நெஞ்சம் மிகக்களித்து
       நிம்மதியாய் நானிருந்தேன்.       13

இந்தவிதம் என்வீட்டில்
       என்னுடைய மக்களினும்
சொந்தம்மிகக் கொண்டாடிச்
       சொன்னபடி கேட்டுவந்தாள்
வந்திருக்கும் நாளையிலே
       ஒருநாள் அருகில்வந்து