215. சுதந்தரம் வேண்டும் கண்ணொளி இன்றி மற்றக் கட்டழகு இருந்தால் என்னப் பண்ணளி இனிமை யூட்டாப் பாட்டுகள் கேட்பது என்னப் புண்ணியப் புகழொன்(று) இல்லாப் பொற்பொதி யுடையார் போலும் திண்ணிய சுதந்தரத்தின் தெரிசனம் இல்லா வாழ்க்கை. 1 உண்டிகள் பலவும் செய்தே உப்பிலா(து) உண்ணல் போலும் கண்டொரு கனிவு சொல்லக் கனிவுஇலான் விருந்து போலும் பெண்தரும் அழகு மிக்காள். பிரியம்இல் லாமை ஒக்கும். தொண்டுசெய்(து) உரிமை இன்றிச் சுகித்துஉடல் வளர்க்கும் வாழ்க்கை. 2 அன்புஅறம் வளர்ந்தி டாமல் ஆற்றலும் அறிவும் குன்றும் வன்புகள் சூதும் வாதும் வழக்குகள் வளரும் வாழ்வின் இன்பமும் ஊக்கம் ஆன்ம எழுச்சியும் இன்றி என்றும் துன்பமும் சோம்பல் சூழும் சுதந்தரம் இல்லா நாட்டில். 3 கல்வியும் கலைகள் யாவும் களைமிகும் பயிர்க ளாகும் செல்வமும் புகழும் தேயும் செருக்கவர் தருக்கி வாழ |