புலவர் சிவ. கன்னியப்பன் 351

நல்லவர் வருந்தி வாட
       நடுநிலை ஞாயம் கெட்டுத்
தொல்லைகள் கட்சி கட்டும்
       சுதந்தரம் இழந்த நாட்டில்.       4

இச்சைபோல் இருந்து வாழ
       ஈப்புழு எறும்பும் கோரும்;
உச்சமாம் மனித சென்மம்
       சுதந்தர உணர்ச்சி இன்றி
நச்செனும் அடிமை வாழ்வை
       நயத்திட ஞாயம் உண்டோ?
நிச்சய சபதம் பூண்டு
       சுதந்தரம் நிலைக்கச் செய்வோம்.       5

உலகினுக்கு அறிவு தந்த
       உண்மைகள் மிகுந்து ஞானக்
கலைகளைக் கணித்து சீவக்
       கருணைசேர் நமது நாடு
பலபல கொடுமை முற்றிப்
       பதைத்திடும் பிறநாட்டார்க்கு
நலம்எடுத்(து) உரைக்க வேண்டும்
       சுதந்தரம் நமக்கு வேண்டும்.       6

குறிப்புரை:-இச்சை - விருப்பம்; நச்சு - விடம். ‘கனிவு இலான்
விருந்து‘ என்பது,உள்ளத்திலே அன்பு இல்லாமல் இடும் உணவுப்
பொருட்கள் ஆகும்; ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து‘ என்பது குறள்; ‘ஒப்புடன் முகம்மலர்ந்தே
உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே
அமிழ்தமாகும்; அப்ப முப்பழமொடு முகங்கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியோடு கடும்பசியாகும்‘ என ஒளவையார் நவில்கிறார்.