சிந்தனையில் தெய்வபயம் சேர வேண்டும்; செய்கையெல்லாம் பொதுநலத்தைக் கோர வேண்டும்; மந்திரமாய்க் காந்திமகான் திருநா மத்தை மக்கள்எல்லாம் மறவாமல் செபிக்க வேண்டும். 5 குறி்ப்புரை:- வள்ளல் - வரையாது கொடுப்பவர்; செபிக்க - மந்திரம் ஓதுதல், வேண்டுதல். 221. கற்பகச் செடி சுதந்தரம் தருகிற மகிழ்ச்சியைக் காட்டிலும் சுகந்தரும் உணர்ச்சியும் வேறுண்டோ? பதம்தரும் பெருமையும் பணம்தரும் போகமும் பார்த்தால் அதைவிடக் கீழ்அன்றோ? இதம்தரும் அறங்களும் இசையுடன் வாழ்தலும் எல்லாம் சுதந்தரம் இருந்தால்தான் நிதம்தரும் துயர்களை நிமிர்ந்துநின்று எதிர்த்திட 1 சோறும் துணிமணி சுகங்களைக் காட்டிலும் சுதந்தர உணர்வே மேலாகும் கூறும் நலங்களை விலைகொத்(து) ஆயினும் கொள்ளத் தகுந்தது சுதந்தரமே. வீறும், கருணையும், வித்தக ஞானமும் விளைவது சுதந்தர விருப்பத்தால் தேறும் பொழுதினில் சுதந்தரம் தொழத்தகும் தெய்வம் என்பது தெளிவாகும். 2 உத்தமன் காந்தியின் மெய்த்தவ பலத்தால் உலகம் இதுவரை கண்டறியாச் சுத்தநல் வழிகளில் சுதந்தரம் அடைந்தோம் சொல்லரும் பாக்கியம் நமதாகும்; கைத்தலம் கிடைத்துள கற்பகச் செடிஇதைக் காயவும் கருகவும் விடமாட்டோம் சத்திய சபதம் பக்தியில் காப்போம் சர்வே சன்துணை புரிந்திடுவான். 3 |