222. தேசீய வாரம் தேசீய வாரத்தைச் சிந்திப்போம் - இந்தத் தேசத்தில் தந்தையை வந்திப்போம் மாசற்ற காந்தியின் நாமமே - என்றும் மனிதர் குலத்துக்குச் சேமமாம். 1 சேவைகள் காரியம் வெல்லுமா - அன்றிச் செல்வச் செருக்குகள் செல்லுமா தேவை நமக்கின்று சேவைதான் - அது தெய்வக் கருணையை மேவுமால். 2 சத்தியம் நம்மிற் குறைந்ததால் - பல சங்கடம் வந்து நிறைந்ததே. பத்தியம் விட்டுப் பிரிந்திடில் - என்ன பயனுள வாகும் மருந்துகள்? 3 நீரில் குளித்திடும் ஆசையால் - சேற்றை நிறையத்தன் மேனியில் பூசல்போல் ஊரைத் திருத்திட எண்ணினோம் - சொந்த ஊழல் மிகுந்திடப் பண்ணினோம். 4 ஒற்றுமை சேரப் புகுந்தவர் - தம்முள் ஒருவரை ஒருவர் இகழ்ந்தனர்! குற்றம் நிறைந்தது நாட்டிலே - உண்ணக் கூழும்கு றைந்தது வீட்டிலே. 5 223. இலங்கைச் சுதந்தர கீதம் வீர கேசரி என்ன நின்றுநம் வெற்றி ஓசை முழக்குவோம் விட்டு ஒழிந்தது கெட்ட காலமும் வீழ்ந்து அழிந்தன தீமைகள் |