360நாமக்கல் கவிஞர் பாடல்கள்

தூரம் ஓடின சூது வாதுகள்
              சூழ்ந்தி ருந்தன யாவையும்
       சூடு பட்டன கேடு கெட்டன
              சூழ்ச்சி வஞ்சனை ஆட்சிகள்!
கோர மாகிய அடிமை வாழ்வுஎனும்
              கொடுமை தந்தன மடமைகள்
       குற்றம் முற்றிலும் பற்று விட்டன
              கூடி விட்டது விடுதலை
ஈர மிக்க இலங்கை நாடுஇனி
              இன்பம் ஓங்கி இலங்கவே
       இன்று தொட்டுச் சுதந்த ரம்தரும்
              இனிய வாழ்வு துவக்கினோம்.       1

ஏசு நாதனைப் புத்த தேவனை
              ஏற்ற முள்ள மகம்மதை
       இணையி லாதநம் காந்தி அண்ணலை
              ஈன்று மெய்ப்புகழ் ஏந்திடும்
ஆசி யாவினில் பகுதி யாகிய
              அழகு சொட்டும் இலங்கையில்
       ஆதி வந்தவர் பாதி வந்தவர்
              யாவர் ஆயினும் இவ்விடம்
வாச மாயுள மக்கள் யாவரும்
              நேச மாய்இனி வாழவே
       வம்பு துன்புகள் வாதபேதமும்
              வந்தி டாவகை ஆளுவோம்.
ஈசன் உண்மையை எண்ணு புண்ணிய
              இந்த நாட்டு நினைப்புடன்
       எதிரி என்றிட எவரும் இன்றியே
              சுதந்த ரக்கொடி ஏற்றுவோம்.       2

மலைவ ளத்திலும் நதிவ ளத்திலும்
              மாவ ளத்திலும் மிக்குளோம்
       மதிவ ளர்த்துஇனி நிதிவ ளர்த்திடும்
              மார்க்கம் முற்றிலும் தீர்க்கமாம்;