புலவர் சிவ. கன்னியப்பன் 39

பண்டி ருந்தார் சேர சோழ
              பாண்டி மன்னர் நினைவெலாம்
       பாயுமேடா உன்னை யின்று
              பார்க்கும் போது நெஞ்சினில்!
கொண்ட கொள்கை அறம்வி டாமல்
              உயிர்கொ டுத்த வீரர்கள்
       கோடி கோடி தமிழர் வாழ்ந்த
              கதைகள் வந்து குத்துமே!
மண்ட லத்தே இணையி லாத
              வாழ்வு கண்ட தமிழகம்
       மகிமை கெட்டே அடிமைப் பட்டு
              மதிம யங்கி நிற்பதேன்?
செண்டெ ழுந்தா லென்னப் பாய்ந்து
              தேச முற்றும் சுற்றிநீ
       தீர வீரம் நம்முள் மீளச்
              சேரு மாறு சேவைசெய்.       2

அன்பி னோடும் அறிவு சேர்ந்த
              ஆண்மை வேண்டும் நாட்டிலே;
       அச்ச மற்ற தூய வாழ்வின்
              ஆற்றல் வேண்டும் வீட்டிலே.
இன்ப மான வார்த்தை பேசி
              ஏழை மக்கள் யாவரும்
       எம்மு டன்பிறந்த பேர்கள்
              என்ற எண்ணம் வேண்டும்.
துன்ப மான கோடி கோடி
              சூழ்ந்து விட்ட போதிலும்
       சோறு தின்ன மானம் விற்கும்
              துச்ச வாழ்வு தொட்டிடோம்!
என்ப தான நீதி யாவும்
              இந்த நாட்டில் எங்கணும்
       இளந்த மிழா! என்றும் நின்றே
              ஏடெ டுத்துப் பாடுவாய்!       3