புலவர் சிவ. கன்னியப்பன் 395

காந்தியின் அருந்தவம் பலித்திடும் காலம்
       கண்முன் இருப்பதை அறிந்திலம் போலும்
ஓய்ந்திடும் சண்டையின் ஒவ்வொரு நாடும்
       ஒப்பரும் காந்தியின் உரைகளைத் தேடும்.       (ஜெய)9

இமயமும் குமரியும் இருக்கிற வரைக்கும்
       இப்பெரும் உலகினில் அவன்பெயர் சிறக்கும்!
சமயமும் நிறங்களும் சமமெனக் கருதும்
       சகலரும் காந்தியை வணங்குவர் பெரிதும்!       (ஜெய)10

மன்னரும் வீரரும் மந்திரி மார்கள்
       மண்ணொடு மண்ணாய் மறைந்திடு வார்கள்
உன்னரும் காந்தியின் பெரும்பெயர் ஒன்றே
       உலகினில் நிரந்தரம் ஒளிதரும் அன்றோ?       (ஜெய)11

இன்னொரு தம்பதி இவர்களைப் போல
       எங்குளர் எனமனம் களித்திடும் சீலம்
அன்னைகஸ் தூரியின் அரும்புகழ் சூழும்
       அற்புதன் காந்தியின் பெரும்பெயர் வாழும்.       (ஜெய)12

குறிப்புரை:- சகலரும் - யாவரும்; சீலம் - ஒழுக்கம்

248. சத்தியமூர்த்தி நம் காந்தி

சாந்தியே உருவாய் வந்த
       சத்திய மூர்த்தி யான
காந்தியே உம்மைக் காணக்
       கணக்கிலா ஜனங்கள் எங்கும்
காந்தம் என்(று) அணுக ஓடும்
       ஊசிகள் காட்சி போலப்
போந்ததும் தரிச னத்தால்
       பொறுமையைக் கற்க வேண்டி       1