தாழ்ந்தவ ரேனும்வாழ்ந்தவ ரேனும் சத்தியம் நாடிய பத்தரலால் வேந்தரும் காணா வேதியர் காணா வேறுஒரு சக்தியின் பேரருளால் மாந்தருள் தெய்வம் நம்பின வாக்கு மனத்துறை இன்பம் எனத்தகுமோர் காந்தியும் தப்பிக் கருணையும் தப்பிக் கடவுளும் தப்பிப் பிழைத்தனரே! 4பொங்கிய‘போலி‘ச் சதான கோபம் பூனாவில் அன்று வெடித்ததுவோ! அங்குஒரு தீங்கும் யாருக்கும் இன்றி அன்புருக் காந்தியும் துன்பமிலார் சங்கெடுத்து ஊது! மங்களம் பாடு! சாந்தி உலகுக்குக் காந்தியினால் எங்ஙனும் சாந்தி யாவர்க்கும் சாந்தி என்ற முதுமறை நிற்றதுபார். 5 குறிப்புரை:-மடமை- அறியாமை; பேரருளால் - பெருங்கருணையால்; நித்தம் - நாள்தோறும். 259. ஜோதிமறைந்து கொண்டதே! சத்தியத்தின்ஓயாத சங்க நாதம் சாந் தித்தரச் சலியாத வேத கீதம் நித்தியதன் வெறியறிவை நீட்டும் சப்தம் நிரந்தரமாம் மெய்ஞ்ஞானக் குழலின்ஓசை மெய்த்தவத்தை நினைப்பூட்ட மீட்டும் வீணை மேலான குணங்களையே மேவும் பாடல் உத்தமருள் உத்தமனாம் காந்தி என்ற தேனொழுகும் வானொலியும் ஓய்ந்துபோச்சே! 1 முத்திவழிகாட்டுகின்ற மோன தீபம் மூடமன இருளகற்றும் முழுவெண் திங்கள் |