புலவர் சிவ. கன்னியப்பன் 449

கண்ணுக்குத் தெரியாத
              காட்சிகள் காண்பேன்
       காதுக்குக் கேளாத
              கீதங்கள் கேட்பேன்
எண்ணிக்கை இல்லாத
              இன்பங்கள் நுகர்வேன்
       எல்லாரும் இன்புற
              எங்கெங்கும் பகர்வேன்.       2

மூக்குஎன்றும் முகராத
              வாசங்கள் போப்பேன்
       முன்னென்றும் தெரியாத
              நன்னயம் பூப்பேன்
நாக்குஎன்றும் அறியாத
              நற்சுவை புசிப்பேன்
       நலிசெய்யும் பசியற்ற
              நாட்டிடை வசிப்பேன்.       3

உடலத்தில் புதுப்புதிதாய்
              உணர்ச்சிகள் பொங்கும்
       உள்ளத்தில் உண்மையும்
              ஞானமும் தங்கும்
சடலத்தைப் பெரிதென்னும்
              உலகத்தை மறப்பேன்
       சத்திய நித்திய
              வானத்தில் பறப்பேன்.       4

ஆயிரம் ஆயிரம்
              ஆண்டுகள் முன்னே
       அப்படி யேபல
              ஆண்டுகள் பின்னே
போயின வருவன
              காட்சிகள் தெரியும்
       புதுமையிற் குறையாமல்
              என்முன்னே விரியும்.       5

15 நா.க.பா. பூ.வெ. எ. 489