தூரமும் காலமும் துச்சங்கள் ஆகும் துன்பமும் இன்பமும் தொண்டுசெய்து ஏகும் நேரமும் கிரகம்என் நினைவின் படிக்கே நின்றுஎன்றன் ஏவலைச் செய்து முடிக்கும். 6 276. தமிழ்நாட்டின் வரவேற்பு ஜவஹர்லால் நேரு ஒன்றாக நல்லகுணம் கொலைசெய்யாமை ஒத்தடுத்த மற்றொன்று பொய்சொல்லாமை என்றுஓதும் தமிழ்வேதம் இசைத்த ஞானம் என்றென்றும் எவ்வெவர்க்கும் எதற்கானாலும் நன்றாகும் என்பதற்கே நடந்து காட்டி நாயகனாம் காந்திமகான் நயந்தமார்க்கம் குன்றாமல் காத்துவரும் ஜவஹர் லாலைக் குதூகலமாய் வரவேற்போம் வாழ்த்துக்கூறி. 1 இராசேந்திர பிரசாத் பதவிதரும் சிறப்புகளில் மயங்கி டாமல் பகட்டான சுகவாழ்வில் முயங்கி டாமல் நிதநிதமும் காந்திமகான் நினைவே பேசி நீதிநெறி தவறாத நிலைமை காக்க உதவிவரும் நல்லறிவின் உருவம் போல்வான் உத்தமனாம் ராசேந்திரப் பிரசாத்எங்கள் இதயமுறும் திருநாட்டின் அதிபன் தன்னை இன்பமுடன் வரவேற்போம் இசைகள்பாடி. 2 |