தேபார் சொந்தநலம் பலகாலும் துறந்து நாட்டின் சுதந்தரப்போர் காந்திவழி தொடர்ந்ததூயன் இந்தியத்தாய் பெருமைபெறும் பணிகளுக்கே எப்போதும் ஓசையின்றி உழைக்கும் தொண்டன் எந்தஒரு காரியமும் எங்கா னாலும் ஏழை மக்கள் பொது நலமே எண்ணிச் செய்வோன் அந்தப் பெருங் குணமிகுந்த அதனால் காங்கிரசு அரியனையில் அமரவரும் தேபார்வாழ்க. 3 குறிப்புரை:- அரியணை - சிங்காசனம்.மேலே கூறிய பாடல்கள் 1956இல் சென்னையைச்சார்ந்த ஆவடியில் கூடியகாங்கிரஸ் மகா சபைக்கு வந்த தலைவர்களுக்கு அளித்த வரவேற்புப்பாடல்கள். குதூகலமாய் - மகிழ்ச்சியாய். 277. காதலே கடவுள் விடிதல் என்று சொலும் காலம் - கீழ் வெளிச்சம் காணுவது போலும் அடவி என்ற சொல்லாலே - மர அடர்த்தி தோன்றுவது போலே புடைவை என்று சொலும் போது - மனம் புகுந்து நிற்கும்ஒரு மாது கடவுள் என்ற பெயர் சொன்னால் - அதில் காதல் சக்தி வரும் முன்னால். 1 காதல் இன்றி உலகில்லை - இதைக் கண்டு கொள்ளஏன் தொல்லை தீது செய்துழலும் காமம் - காதல் தெய்வசக்தி தரும் நாமம். வாது பேசுவது மடமை - அதன் வாய்மை கண்டறிதல் கடமை |