466நாமக்கல் கவிஞர் பாடல்கள்

;பெண்களை இகழ்ந்து முற்றும்
       பேதைகள் என்று பேசிப்
புண்கொள எழுதி வைத்துப்
       புரைகொளச் செய்து வாழ்வின்
கண்களில் ஒன்றைக் குத்திக்
       கரித்திடச் செய்தார்; என்ன
எண்கொள எண்ணி யெண்ணி
       ஏங்குவாள் அதுவே ஏக்கம்.       17

;மறுமணம் மாதர்க்(கு) இல்லை
       மதலையை விதவை யாக்கி
நறுமணப் பூவும் இன்றி
       நல்லஓர் துணியும் இன்றி
உறுமணல் தேரை போல
       ஒளிந்திருந்து ஒடுங்கச் செய்யும்
சிறுமனப் பான்மை யேநம்
       தேசத்தின் நாசம் என்பான்.       18

கற்பெனப் பேசு வார்கள்;
       கற்பினைப் பெண்ணே காக்கப்
பற்பல பெண்ணை நாடிப்
       பசப்பலாம் ஆண்கள் மட்டும்;
அற்புதம் ஆன தாகும்
       அநியாயம் இந்த நாட்டின்
நற்பதம் கெடுத்தது‘ என்று
       நாள்எலாம் நைவாள் நங்கை.       19

நாட்டியம் ஆடச் செய்தும்
       நாடகம் நடிக்கச் செய்தும்
பாட்டையும் பாடச் செய்தும்
       பரத்தையர் குலமும் பண்ணி
ஆட்டிய கதைகள் எல்லாம்
       ஆடவர்க் கான இன்ப