உடைகளில் அழகு பார்ப்பான் உண்கலம் அழகு பார்ப்பான் குடைதடி படுக்கை மேசை குரிச்சியில் அழகு பார்ப்பான். கடைகளில் அழகாய்த் தோன்றக் கண்டதை எல்லாம் வாங்கி அடைவுற வீட்டில் எங்கும் அலங்கரித்து அழகு பார்ப்பான். 7 காலையின் அழகில் பூத்துக் காய்கனி நிறைந்து காட்டும் சோலையின் அழகைச் சொல்வான்; சூரியன் சிவந்து தோன்றும் மாலையின் அழகைப் போற்றி மலைகளில் படிந்த மேகச் சீலையின் அழகைப் போற்றிச் சித்திரக் கோலைத் தீட்டும். 8 கைச்சிறு ‘காமிரா‘வில் கண்டதை எல்லாம் ‘போட்டோ‘ இச்சைபோல் எடுத்து வந்தே இருட்டறை கழுவிப் பார்ப்பான்; அச்சிறு படத்தில் எல்லாம் அழகையே பொருளாய்ப் பேசி மெச்சிடும் நண்ப ரோடு மிகமிகப் பொழுது போக்கும். 9 நாடகப் பிரியன்; நல்ல நாட்டியக் கலையில் ஆசை கேடயம் கத்தி யோடு ‘கொடிகள்‘ பழக ஆசை நீடிய நேரம் நீரில் நீந்திட நிறைந்த ஆசை. ஓடமும் தானே ஓட்டி உலவிட உவப்பான் உள்ளம். 10 |