வேற்றுமை பலவிலும் ஒற்றுமை கண்டிடும் வித்தையிற் சிறந்தது தமிழ்நாடு. மாற்றொரு மதத்தையும் போற்றிடும் பெருங்குணம் மதமெனக் கொண்டவர் தமிழர்களே. 8 எம்மதம் ஆயினும் சம்மதம் என்பதை ஏந்தி நடப்பது தமிழ்நாடு. அம்மன உணர்ச்சியை அறமெனக் காப்பதில் அசைந்திட லாமோ தமிழறிவு? 9 மதமெனும் பெயரால் மக்களை வதைப்பதை மாநிலம இன்னமும் சகித்திடுமோ? விதவிதம் பொய்சொல்லி வெறுப்பினை வளர்த்திடும் வெறியரைத் தமிழர்கள் முறியடிப்போம். 10 குறிப்புரை:- தாபம் - துன்பம்; மடிப்பது - மோசம், வஞ்சம்; வித்தை - கல்வி. 25. தமிழ் மக்கள் நிலைபெற்ற அறிவென்ற நிதிமிக்க நல்கும் நிறைவுற்ற அருள்கொண்ட நிகரற்ற தெய்வம் கலைமிக்க தமிழன்னை கழல்கொண்டு பாடிக் கனிவுற்ற மனமொத்த களிகொண்டு கூடி அலையற்ற கடலென்ன அமைவுற்று நாளும் அகிலத்தின் பலமக்கள் அனைவர்க்கும் உறவாய்த் தலைபெற்ற புகழ்கொண்டு தவமிக்க ராகித் |