476நாமக்கல் கவிஞர் பாடல்கள்

நாடுகள் சுற்றுவதால் - பல
       நல்லன கற்றுவரும்.
கேடுள வண்டல்களை - விட்டுக்
       கேண்மையைக் கொண்டுவரும்.       8

மானிட வர்க்கம்எலாம் - ஒரு
       மாதாவின் மக்கள்என்ற
ஞான உபதேசம் - தென்றல்
       நம்மிடை யேபேசும்.       9

என்றும் இருந்துலவி - புவி
       எங்கும் திரிந்திட லால்
தென்றல் வருந்தோறும் - நம்முள்
       தெய்வ நினைப்பூறும்.       10

286. இளமை

கற்பனை மிகுந்ததும் இளைஞர்மனம்
       கவிதைக்(கு) உகந்ததும் இளைஞர்மனம்
அற்புத உணர்ச்சிகள் அலைபுரளும்
       ஆனந்தம் வாலிப நிலைதருமே.       1

துள்ளி மகிழ்வதும் இளம்பருவம்
       துடிதுடிப் புடையதும் இளம்பருவம்
அள்ளித் தருவதும் அதன்பெருமை
       ஆர்வமும் ஆற்றலும் அதன்உரிமை.       2

இன்பம் குளிப்பதும் இளம்பருவம்
       ஈகையிற் களிப்பதும் இளம்பருவம்
துன்பம் நேரினும் மலைக்காது
       துக்கம் அதனிடை நிலைக்காது.       3

வளர்ச்சியைத் தரிப்பது வாலிபமாம்
       வல்லமை வரிப்பதும் வாலிபமாம்
தளர்ச்சியை மறப்பதும் வாலிபமே
       தைரியம் சிறப்பதும் வாலிபமே.       4