கஞ்சத் தனங்களை அறியாது; காசு பணம்தர மறையாது; தஞ்சம் உதவிடத் தாவிவரும்; தருணம் வாய்ந்திடில் ஆவிதரும். 5 சோம்பலை ஒழிப்பதும் வாலிபமாம் சோர்வினைப் பழிப்பதும் வாலிபமாம் நோன்பென நித்தமும் நூல்படிக்கும் நுண்ணறி வாகிய பால்குடிக்கும். 6 புதுமையை விரும்புதல் அதன்உடைமை புரட்சிகள் அரும்புதல் அதனிடையே முதுமையின் பெருமையை எள்ளாது மூடப் பழக்கமும் கொள்ளாது. 7 கேலியும் சிரிப்பும் பரபரப்பும் கிளர்ச்சியும் காரியத் துருதுருப்பும் வாலிப உள்ளம் வாடாமல் வாழ்ந்திடும் நாடே நாடாகும். 8 மாணவ இளைஞரின் சிறந்ததனம் மாசுகள் படியாக் குழந்தைமனம் ஆணவம் புகுந்ததைக் கெடுக்காமல் ஆண்டவன் அருளை வேண்டிடுவோம். 9 குறிப்புரை:- வாலிபம் - இளமை; அரும்புதல் - தோன்றுதல்; முதுமை - இளமைக்கு மாறானது. 287. பூஞ்சோலை மான்சேர மயில்ஆடக் குயில்பாட மலர்கள் தேன்சேர மகரந்தம் திசைதோறும் சிதற மீன்சேரும் சிற்றோடை மெல்லோசை தவழும் பூஞ்சோலை அதிலுற்றுப் புளகித்து மகிழ்வோம். 1 |