புலவர் சிவ. கன்னியப்பன் 479

புதியன பலப்பல
       உணர்வுகள் புலப்பட
அதிசயம் மிக்கென
       அறிவுகள் புக்கன.       1

காலையின் அழகுகள்
       கதிரொளி வரவால்
மாலையின் மயக்கமும்
       கதிரொளி மறைவால்,
சோலையின் பசுமையும்
       கதிரொளி வசமே;
லீலைகள் எண்ணில்
       கதிரொளி நீசமே.       2

உடல்நல முறுவது
       கதிரொளி உறவால்
கடல்சலம் மழைதரல்
       கதிரொளித் திறமே
செடிகொடி மலர்எழில்
       கதிரொளிச் செயலே
கடவுளை உலகினில்
       காட்டுவது அதுவே.       3

ஏழையும் செல்வனும்
       இருவரும் சமமே.
கோழையும் கொடியரும்
       கூடத்தன் தமராய்
ஆழியை நடத்திடும்
       கதிரொளி அரசன்
வாழிய வாழ்த்திநல்
       வாழ்வுகள் பெறுவோம்.       4