480நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஐயம் இல்லை தெய்வம் உண்டுஎனப்
பையப் பைய என்னைப் பழக்கி
அன்னை என்னுடைச் சின்ன வயதில்
சொன்னது மட்டும் இன்னும் மறந்திலேன்;
‘உண்டு‘ என்பதைக் கண்டிலேன் தெளியப்       5

பண்டைநம் முன்னோர் பகர்ந்ததை எல்லாம்
படித்துப் பார்த்தேன்; பாடமும் கேட்டேன்;
ஒடித்துப் பிரித்தும் ஊன்றி எண்ணினேன்;
"நீறு பூசினால் நேர்ந்திடும்" என்றார்;
நீறு பூசியெந் நேரமும் கழித்தேன்;       10

"கண்டிகை தரித்தால் காணலாம்" என்றார்;
கண்டிகை கனத்தும் கண்டிலேன் பொருளை;
"நாமம் தரித்தால் நாடலாம்" என்றார்;
நாமம் புனைவதில் நாள்பல கழித்தேன்;
"துளசி மாலையும் துணைசெயும்" என்றார்;       15

துளசியும் தொடுத்தேன்; மணிகளும் சுமந்தேன்;
"பஜனை செய்தால் பலித்திடும்" என்றார்;
பஜனை கோஷ்டியில் பாடினேன் பலநாள்;
"ஊனும் உயிரும் அவனே" என்றார்.
ஊனினும் காணேன்; உயிரினும் காணேன்;       20

"கோயிலிலும் குளமும் குடியிருப்பு" என்றார்;
கோயிலில் தேடினேன்; குளத்திலும் முழுகினேன்;
"வேத நூல்களில் விளங்கிடும்" என்றார்;
வேதமும் கேட்டேன். விளங்கவே இல்லை;
"மந்திரம் கற்றால் வந்திடும்" என்றார்;       25

மந்திரம் செபித்தேன் தந்திரம் பலித்திலேன்;
‘பட்டினி இருந்தால் பார்க்கலாம்" என்றார்;
பட்டினி விரதம் பழகியும் பார்த்தேன்;