"மூச்சை அடக்கினால் முன்வரும்" என்றார்; மூச்சைப் பிடித்து முயன்று பார்த்தேன்; 30 கண்டிலேன் அந்தக் கடவுளை; அதனால் "பண்டை வழிகளில் பயனிலை போலும்! எந்தையர் சொன்ன இந்து மதத்திலே இந்த ரகசியம் இல்லையோ?" என்று மதங்கள் என்று மற்றவர் சொன்ன. 35 விதங்களை எல்லாம் விரித்திடும் நூல்கள் புத்தகம் பற்பல புரியப் படித்தேன்; வித்தகர் சொன்ன விளக்கமுங் கேட்டேன்; புதுப்புது வழிகளில் புகுந்து புகுந்து மதிப்புள எல்லா மார்க்கமும் போனேன்; 40 செல்லா வழியென எண்ணிநான் சென்ற எல்லா வழிகளும் என்னைக் கொண்டுபோய் முன்னே இருந்த மூலையே சேர்ந்தன. என்னே! தெய்வம் எங்கோ! எதுவோ இருந்த இடத்தில் இல்லையென்(று) எண்ணித் 45 திரிந்த இடத்திலும் செரிந்திட வில்லையே! இல்லையென் றுரைக்கத் தைரியம் இல்லை; தொல்லையென்(று) அதனைத் துறக்கவும் துணிவிலை; இல்லையே ஆனால் தொல்லையே இல்லை நல்லதே நம்மைக் கேட்பார் இல்லை; 50 இருப்பதும் உண்மைதான் என்றால் என்ன? பொறுப்பதும் அவர்க்கே; காத்தருள் புரியும். குறிப்புரை;- வித்தகர் - மேலானவர். 16 நா.க.பா. பூ.வெ. எ. 489 |