482நாமக்கல் கவிஞர் பாடல்கள்

290. காந்தி வழி பழசா?

சாந்தவழி சத்தியத்தில் சலித்தாய் நெஞ்சே!
       சன்மார்க்கப் பழக்கம் இல்லாச் சகவா சத்தால்
காந்திவழி பழசாகப் போன தென்று
       கதிமாற மதிமாறிக் கருது கின்றாய்;
மாந்தருக்குள் காந்தியைப்போல் புதுமைவாழ்க்கை
       மற்றுஒருவர் நடத்தினரா? மனமே! சொல்வாய்;
ஆய்ந்தறிந்த அவன்தொடர்பை இகழ்வாய் ஆனால்
       யாரும்இனி மீட்கவொண்ணா அடிமை யேநீ.       1

‘பெற்றெடுத்த தாய்மிகவும் பழசாய்ப்போனாள்
       பிறிதொருதாய் வேண்டும்‘ என்றுபேசுவார்போல்
நற்றவத்தால் நமக்குஅடுத்த தலைவன் காந்தி
       நானிலத்தில் உயிர்க்கெல்லாம் தாயாம் நண்பன்
கற்றதை சரித்திரங்கள் காணாச் சுத்தன்
       கருணையென்ப(து) இன்னதுஎனக் காட்டும் தீரன்
உற்றதுணை காந்திவழி பழசாம் என்றால்
       உய்வதற்கு வேறுகதி உண்டோ நெஞ்சே!       2

சந்திரனும் சூரியனும் பழசாய்ப் போனார்;
       சலித்துவிட்டோம் தினந்தினமும் அவரைப்பார்த்து;
விந்தையுள்ள வேறிருவர் வேண்டும் என்று
       விரும்புவதை ஒக்கும் அன்றோ விளம்பாய் நெஞ்சே!
இந்நிலம் இதுவரையில் அறிந்த உண்மை
       இதைவிடமேல் இல்லையென நடந்து காட்டிச்
சந்ததமும் மாறாத அறத்தைக் காக்கும்
       சாந்தன்அந்தக் காந்தியைநீ சலித்த தன்மை!       3

‘நித்தம் ஒரு காற்றினையே மூச்சு வாங்கி
       நீர்நெருப்பு நிலம்வானில் புதிசும் இன்றி
மெத்தவும்நாம் சலித்துவிட்டோம்‘ என்பாய்ஆனால்
       மேதினியில் வேறுவழி உண்டோ நெஞ்சே!