54நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஆனால் அவர்கள் அதற்கெனப் பழகினோர்.
அப்படிப் பழகினோர் மிகச்சிலர் ஆவர்;       30

அவர்களைப் பற்றியும் அக்கறை இல்லை.
பொதுஜன மனத்தில் அறிவைப் புகட்ட
இனிய ஓசையால் உணர்ச்சியை எழுப்பப்
‘பாடுவோன்‘ கருத்தைக் ‘கேட்போன்‘ பருக
எண்ணமும் ஓசையும் இசைவதே ‘இசை‘யாம்       35

இசைப்பவன் கருத்தும் கேட்பவன் எண்ணமும்
ஒன்றாய் கலப்பது ஓசையால் அன்று.
சொல்லே அதற்குத் துணையாய் நிற்பது.
அந்தச் சொல்லும் சொந்தச் சொல்லாம்;
தாய்மொழி ஒன்றே தனிச்சுவை ஊட்டும்.       40

அவரவர் மொழியில் அவரவர் கேட்பதே
‘இசை‘ எனப்படுவதன் இன்பம் தருவது.
புரியாத மொழியில் இசையைப் புகட்டல்
கண்ணைக் கட்டிக் காட்சி காட்டுதல்
தமிழன் சொந்தத் தாய்மொழிச் சொல்லில்       45

இசையைக் கேட்க இச்சை கொள்வதே
‘தமிழிசை‘ என்பதன் தத்துவ மாகும்.
தத்துவம் இதனை மனத்தில் தாங்கி,
புதுப்புது ‘மெட்டை‘யும் இசையில் புகுத்திப்
பழைய ‘சிந்துகள்‘ ‘பதங்கள்‘ ‘வண்ணமும்‘       50

தமிழின் சொந்தச் சந்தம் பலவும்
அழிந்துபோ காமல் அவற்றையும் போற்றித்
‘தமிழிசை‘ வளர்ப்பது தமிழன் கடமையாம்.
சங்கீ தத்தையும் தமிழன் கைவிட்டான்.
சரித்திரம் அறிந்த சத்தியப் படிக்கு       55

யாழின் விதங்களும், குழலினம் அனைத்தும்,
வாத்தியக் கருவிகள் வகைகள் பலவும்,