புலவர் சிவ. கன்னியப்பன் 55

ஏழு சுரங்களை இயக்கும் விதமும்,
‘கர்நாடகத்துச் சங்கீதம்‘ என்றே
அழைக்கப் படுகிற அந்தக் கலையும்       60

தமிழன் ஆதியில் வளர்த்துத் தந்ததே.
இன்றைய தினத்திலும் இந்தக் கலைகளில்
தலைசிறந் துள்ளவன் தமிழனே யல்லவா?

29. செழித்து நிற்பது செந்தமிழ்

"தன்குஞ்சு ஒன்றே பொன்குஞ்சு என்று
கன்னங் கறுத்த காக்கையும் கருதும்"
என்னும் பழமொழி இயல்புக் கிணங்க
அவரவர் மொழியே அவரவர்க் குயர்ந்ததாம்.
ஆயினும் தமிழை அதற்காய்ப் புகழ்ந்திடோம்.       5

பழமை மிக்க தமிழெனும் மொழியாம்.
ரசங்கள் நிறைந்த ராமா யணத்தை
வான்மீகி முனிவன் வரைந்த போதே
தமிழர் நாட்டைத் தனியே புகழ்ந்தான்;
ஆட்சியின் சிறப்பையும் அதிலே சொன்னான்.       10

வான்மீகி காலம் வரையறை அற்றது;
அதற்கும் முன்னால் ஆண்டனர் தமிழர்;
இலக்கண அமைப்பிலும் இலக்கியச் சிறப்பிலும்
தனிப்பட்டுயர்ந்தது தமிழ்மொழி என்றே
ஆராய்ந்தறிந்த அனைவரும் சொல்லுவர்.       15

எந்த மொழியையும் இகழ்ந்திடாத் தமிழன்
பற்பல பாஷைகள் நன்றாய்ப் படித்தும்
அறிவையே நாடி அலசிப் பார்த்தும்
உலகத்தி லுள்ள உயர்ந்த கருத்துகள்
எல்லாம் நிறைந்த இலக்கியம் உள்ளதாய்ச்       20

சேர்த்து வைத்த செல்வம் தமிழ்மொழி
இன்று நேற்று ஏற்பட்ட தன்று;