வேசியை விரும்பும் வெறியரைப் போன்ற பாஷையை மறந்த பாதகர் பிறந்து தேசமிந் நாட்டின் தீவினை யாலே சீச்சீத் தமிழெனச் சீறிப் பழித்து நாசியை நீட்டி நாய்போல் விழுந்து. 30 ஏசித் திரியும் இழிவுடை மாக்கள் பேசவும் கூசிடும் பேயர்கள் பிறந்து தன்னை வளர்த்த தமிழைப் பேசுதல் குன்றுந் தொழிலெனக் கூசியே நின்று பன்னப் பன்னப் பல்லைக் காட்டிடும் 35 சின்னஞ் சிறியவர் பிறந்தத னாலே தாயை மறந்த தடியர்கள் போல வாயைத் திறந்தொரு வார்த்தை சொல்லவும் உரிமையாம் பாஷையைத் தெரியா திருப்பது பெருமையென் றெண்ணும் பேயெனு மாக்கள் 40 குங்குமம் சுமந்த கழுதையே போலத் தம்முடைப் பாஷையைத் தாமுண ராமல் அத்துடன் அதனை அவமதித் தேசும் பித்தரும் பதரெனும் சுத்தநிர் மூடர்கள் பிறந்தத னாலே பெருமை மறந்து 45 சிறந்த நாளும் சீரும் குறைந்து மண்ணிற் கிடக்கும் மணியே போலும் எண்ணெயிற் றோய்த்த எழுத்தே போலும் அற்பரை அண்டிய விற்பனர் போலும் ஆதர வில்லா வித்தையே போலும் 50 அணைப்பவ ரில்லாக் குழந்தையே போலும் அநுபவ மில்லா அறிவே போலும் மங்கிக் கிடக்கும் மருவிலாத் தமிழை இங்கிதத் தமிழை இனிமையாம் தமிழை அந்த நாளினிற் சந்திர முடியோன் 55 |