60நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சுந்தரப் படுத்த வந்துநின் றருளி
விருத்தியே செய்யக் கருத்தினி லெண்ணிப்
பெருத்த கேள்வியர் பெரியவர் சபையெனச்
சங்கரன் தானே அந்தத் தலைவனாய்த்
தங்கியே நடத்திய தனிப்பெரும் சபையெனச்       60

சுத்தரும் சித்தரும் பக்தரும் துதிக்க
இத்தரை யெல்லாம் இசைகொண்டு நின்றே
உலகெலாம் அழியினும் விலகிடாப் புகழொடும்
அலகிலாக் கல்விக் களஞ்சிய மாகித்
தெய்வப் பலகையைத் தன்னிட மடக்கி       65

ஐயமில் லாத அருந்தமி ழளித்த
சித்திரச் சபையாம் மெய்த்திருச் சபையாம்
முத்தமிழ்ச் சங்கம் விளங்கிய தமிழைத்
தாயெனப் பேணித் தமிழர்கள் யாவரும்
ஓயா துழைத்தே ஒப்பிலா மொழியெனப்       70

புதுப்புதுக் கவியும் புகழ்பெரு நூல்களும்
விதவிதம் படைத்து வேறுள நாட்டவர்
யாவரும் வியக்க அரியா சனத்தில்
மேவிடச் செய்ய விரைகுவம் இன்றே.

குறிப்புரை:-மங்குதல் - ஒளியின்மை; மகுவிலா - கலத்தவிலா;
இங்கிதம் - இனிமை.

32. தமிழ் பாடி வாழ்வோம்

தன்நாட்டுத் தாய்மொழியில் எவரும் கேட்கத்
       தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு வேண்டுமென்ற
நன்னாட்டத் துடன்ராஜா நம்சர் அண்ணா
       மலையவர்கள் அதற்காகப் பரிசு நாட்டத்
தென்னாட்டுச் சிதம்பரத்தில் அறிஞர் கூடித்
       தமிழ்மொழிக்குத் தேவையென்று தீர்மானித்தால்
எந்நாட்டு யாராரோ எங்கோ கூடி
       ஏசுவதும் பேசுவதும் என்ன வித்தை       1