புலவர் சிவ. கன்னியப்பன் 71

மேல்படிந்த பிசினகற்றி, மெல்லக்கீறி
       மெதுவாகச் சுளைஎடுத்துத் தேனும் வார்த்து
நூல்படிந்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான்
       கம்பனென்ற தமிழ்த்தாயார் நோற்ற மைந்தன்.       3

குறிப்புரை:- சிகரம் - உச்சி; வனம் - காடு; மால் - திருமால்.

38. இராமகிருஷ்ண தேவர்

முன்னையோர் நமது நாட்டின்
              முனிவரர் தேடி வைத்த
       முழுமுதல் ஞான மெல்லாம்
              மூடநம் பிக்கை யென்றும்,
பொன்னையே தெய்வ மென்றும்,
              போகமே வாழ்க்கை யென்றும்,
       புனிதரைக் கொன்று வீழ்த்தும்
              போரையே வீர மென்றும்
தன்னையே பெரிதா யெண்ணித்
              தனக்குமேல் இருக்கும் வேறோர்
       சக்தியின் நினைப்பே யின்றித்
              தருக்கியே பிறப்பின் மாண்பைத்
தின்னுமோர் மயக்கம் நீங்கித்
              தெளித்திட எழுந்த ஞான
       தீபமே! ராம கிருஷ்ண
              தேவனே! போற்றி போற்றி!       1

மனிதரின் பாவம் போக்க
              மகிழ்ச்சியோ டுயிரைத் தந்த
       மாபெரும் த்யாக மூர்த்தி
              ஏசுவின் அன்பாம் நெய்யைத்
தனிவரும் துறவி யென்று
              தரணியோர் யாரும் போற்றும்
       சாந்தனாம் புத்த தேவன்
              தவமெனும் தட்டில் ஊற்றி,