இனியொரு மனிதர்க் கில்லை இத்தனைப் பொறுமை ‘என்னும் எம்பிரான் மகமத் நீட்டும் சமரசக் கைகள் ஏந்த, சினமெனும் அரக்கர் கூட்டம் திரியென எரியும் ஞான தீபமே! ராம கிருஷ்ண தேவனே! போற்றி போற்றி! 2 பேயென்றும் மாயை யென்றும் பெண்களை இகழ்ந்து பேசிப் பெருந்துற வடைந்த பேரும் பிழைபுரிந் தவரே யன்றோ! தாயென்றும் துணைவி யென்றும் தன்னுடை நோக்கம் காக்கும் சகதர்ம சக்தி யென்றும் சாரதா தேவி தன்னை நீயென்றும் மகிழ்ந்து கொண்ட நிர்மல வாழ்க்கை தன்னை நிலைத்திடுந் தோறும் நெஞ்சம் நெக்குநெக் குருகும் ஐயா! தீயென்னப் புலனைக் காய்ந்த தீரனே! ஞான வாழ்வின் தீபமே! ராம கிருஷ்ண தேவனே! போற்றி போற்றி! 3 ‘ஜாதியில்உயர்ந்தோம்‘ என்னும் சனியனாம் அகந்தை நீங்கத் தாழ்ந்தவர் குடிசை தோறும் தலையினால் பெருக்கி வாரும் சேதியைத் தெரிந்த அன்னார் திகைத்துனைத் தடுத்த தாலே தெரியாமல் இரவிற் சென்று தினந்தினம் அதனைச் செய்தாய் |