புலவர் சிவ. கன்னியப்பன் 73

ஆதியின் அருளைத் தேடும்
              அந்தணர்க் கரசே! ஐயா!
       ஆணவம் அழிந்தா லன்றி
              ஆண்டவன் அணுகான் என்றாய்.
தீதுகள் உலகில் நீங்கித்
              திக்கெலாம் ஒளிரும் ஞான
       தீபமே! ராம கிருஷ்ண
              தேவனே! போற்றி போற்றி.       4

இரும்பினால் சதையும் நல்ல
              எஃகினால் நரம்புங் கொண்ட
       இந்திய இளைஞர் தோன்றி
              உழைத்திட வேண்டும்‘ என்று
விரும்பினோன் மதனரூப
              விவேகா னந்த ஞானி
       வேடிக்கை யாக வந்து
              ‘கடவுளைக் காட்டும்‘ என்ன,
அரும்பினாய் முறுவல் அங்கே
              அதன்பொருள் அறிவார் யாரோ
       அன்றேஉன் அடிமை யாகி
              அதுமுதல் உன்னை விட்டுத்
திரும்பிடான் விட்டில் போலத்
              திளைத்தவன் விழுந்த ஞான
       தீபமே! ராம கிருஷ்ண
              தேவனே! போற்றி போற்றி!       5

‘காவியை உடுத்தி டாமல்
              கமண்டலம் எடுத்தி டாமல்
       காட்டிடை அலைந்தி டாமல்
              கனலிடை நலிந்தி டாமல்
பூவுல கதனைச் சுத்தப்
              பொய்யென்றும் புகன்றி டாமல்
       புறத்தொரு மதத்தி னோரைப்
              புண்படப் பேசி டாமல்