சேவைகள் செய்தாற் போதும்; தெய்வத்தைத் தெரிவோம்; என்று தெளிவுறக் காட்டி னாய்உன் தினசரி வாழ்க்கை தன்னால்; தீவினை இருட்டைப் போக்கிச் செகமெலாம் விளங்கும் ஞான தீபமே! ராம கிருஷ்ண தேவனே! போற்றி போற்றி! 6 குறிப்புரை:-செகமெலாம் - உலகெலாம். (6)புண்பட - வருத்தப் படும்படி; புகன்றிடாமல் -சொல்லாமல் (6); மதன ரூபம் - அழகிய வடிவம். (5) அகந்தை - செருக்கு, கர்வம். (5) 39. ஊனொடு உயிர் கலந்த ஒழுக்கம் எல்லா மதத்தினரும் கூடுவோமே ஏகம் கடவுளென்று பாடுவோமே; நல்லார் உலகிலெங்கும் சொன்னதொன்றே ராமகிருஷ்ணர் வாழ்க்கையால் கண்டோ மின்றே. 1 இற்றைக்கு நூறாண்டு முன்னம்ஒருநாள் இந்நாட்டின் தெய்வீகத் தன்மைகளெல்லாம் புத்தம்புதுஉருவில் தேவையறிந்தே போந்ததென ராமகிருஷ்ண தேவர்பிறந்தார். 2 பள்ளிப் படிப்பெதுவும் இல்லாமலும் பாடமும் வேறொருவர் சொல்லாமலும் வெள்ளம் பலநிறைந்த கடலேபோல் வெவ்வேறு மதங்களுக் கிடமானார். 3 தானே நினைத்தறியும் படிப்பன்றோ தன்னை தேற்றுவித்த முடிப்பாகும்? ஊனோ டுயிர்கலந்த ஒழுக்கமன்றோ உண்மை ராமகிருஷ்ணர் வழக்கமெல்லாம்? 4 |