புலவர் சிவ. கன்னியப்பன் 81

அன்னியர்கள் தொட்டிழுக்க அவமானம்
       நேர்ந்ததென அழுது நின்றாள்
அன்னை யுன்றன் பாரதத்தாய்; அவள்மானம்
       காப்பதற்கே அவத ரித்தாய்;
சின்னஉன்றன் வயதுமுதல் இதுகாறும்
       அப்பிடியைத் தளர்த்து விட்டாய்
இன்னுமவள் சிறைநீங்கி வருவதற்குள்
       எம்மைவிட்டே ஏகி னாயே!       3

பகையென நினைத்த பேரும்
       பக்தியோ டஞ்சி நிற்பார்;
மிகையெனச் சொல்லு வோரும்
       மெய்சிலிர்த் திருவர் கண்டால்;
நகைமுகங் கண்ட போதும்
       நடுங்குவார் வெள்ளைக் காரர்;
தகையவன் பிறிந்து போகத்
       தரிக்குமோ இந்த நாடு?       4

வசைகூறி உனையிழந்த வாலண்டைன் சிர்ரலெனும்
              வகையி லோனை
       வழிகூற அவன்மேலே நீதொடுத்த
              வழக்கிற்பல வஞ்ச மாற்றி,
அசைகூறி ஆங்கிலர்கள் அவன்பக்கம் தீர்ப்பளித்த
              அவதி நோக்கி,
       அங்கவர்கள் நீதிதனில் வைத்திருந்த நம்பிக்கை
              அறவே நீங்கி,
இசைகூற உலகமெலாம் இருந்தாலும்
              பெருங்கடவுள் இருமன் றத்தில்
       எடுத்துரைப்போம் இக்குறையும் இந்தியர்கள்
              பலகுறையும்; என்று சொல்லிப்
பசைகூறித் தேவரிடம் பண்ணினையோ
       விண்ணப்பம் பரிவு கூறிப்