பாங்குடனே அவர்விடுத்த ஓலைக்குப் பதிலுரைக்கப் போயி னாயோ! 5 நிலையிழந்து பரிதவிக்கும் நீபிறந்த இந்நாட்டின் நிலைமை நோக்கு, நீபட்ட கொடுந்துயரம் இன்னொருவர் படுவரென நினைக்கப் போமோ? கலையிழந்த மதியானோம்; கண்ணிழந்த முகமெனவே கலங்கி நின்றோம்! காரிழந்த பயிரெனவே சோறிழந்த வயிறெனவே சோர்ந்து விட்டோம்? தலையிழந்த உடலமெனத் தவிக்கின்றோம் இது உனக்குத் தருமந் தானா? தஞ்சமென முன்னின்று தைரியத்தோ டுழைக்குமுன்றன் சத்த மோய அலையிழந்த கடலேபோல் ஆட்டிழந்த பம்பரம்போல் அடங்கி வீழ்ந்தோம்! ஆரினிமேல் எங்களையிங் கன்னையென முகந்துடைத்தே அறிவு சொல்வார்! 6 ‘இருப்பாய்நீ சிறைவாசம் இருமூன்று வருடம்‘ என இசைந்து கூறி, இதுபோதா துன்றனக்கு; மிகக் குறைத்தேன் நானிதனை‘ என்ற, உன்றன் சிறப்பறியப் போதாத தேவாரென் றொருஜட்ஜு செப்புங் காலை, சிரித்தமுகம் கோணாமல் சினத்தஅகம் காட்டாமல் செப்ப லுற்று மறுப்பதுண்டு; குற்றமிலேன், மகிதலத்தை ஆளுகின்ற சக்தி வேறே மறைந்திருந்து நானடையும் கஷ்டத்தின் பயனான மர்ம மாகச் |