புலவர் சிவ. கன்னியப்பன் 83

சிறப்பென்றன் தேசமென்று தெய்வத்தின்
              திருவுள்ளத் தீர்ப்போ? என்று
       செப்பினசொல் அழியாமல் எம்மனத்தில்
              பச்செனவே திகழு மென்றும்.       7

அஞ்சாத நெஞ்சம் வேண்டின்
              அசையாத ஞானம் வேண்டின்
       அடாத கொள்கை வேண்டின்
              ஓடாத உறுதி வேண்டின்
கெஞ்சாத வாழ்க்கை வேண்டின்
              கேடிலா எண்ணம் வேண்டின்
       கேளாத கலைகள் வேண்டின்
              மாளாத உழைப்பு வேண்டின்
நஞ்சான பேர்கள் யாரும்
              நடுங்குமோர் நடத்தை வேண்டின்
       நாணாத செயல்கள் வேண்டின்
              கோணாத குணங்கள் வேண்டின்
செஞ்சாறு வார்த்தை வேண்டின்
              திலகனார் சரிதை தன்னில்
       தெரியாத நீதி யெல்லாம்
              தெரியலாம் தெளிவா யங்கே.       8

கருத்ததெல்லாம் நீராமோ? வெளுத்ததெல்லாம்
              பாலாமோ? கண்ணிற் கண்ட
       கல்லெல்லாம் மாணிக்கக் கல்லே யாமோ?
பருத்ததெல்லாம் கரியாமோ? பாய்ந்த தெல்லாம்
              சிங்கமாமோ? பளப ளப்பாய்ப்
       பளுவிருந்தால் தங்கமெனப் பகர லாமோ?
விரித்தநிலாக் கதிர்பரப்பி வெள்ளியொடு
              பலமீன்கள் விளங்கி னாலும்
       வெய்கதிரோன் வந்ததென விளம்ப லாமோ?
தெருத்தெருவாய் மேடையிட்டுத் திசைமுழங்கப்
              பலபேசித் திரிந்திட் டாலும்
       திலகர்பிரா னாவரெனச் செப்ப லாமோ?       9