84நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கருமமது செய்தல் வேண்டும்
              கலங்காமல் உழைத்தல் வேண்டும்
       கண்ணபிரான் கீதையிலே
              சொன்னமொழி கடைப்பி டித்த
பெருமையுள்ள திலக ரைநீ
              பிரித்தாயே யெம்மை விட்டு!
       பெம்மானே! ஒருவ ரம்நீ
              பிழையாது தருதல் வேண்டும்;
தருமமது குறையும் போதும்
              தப்பிதங்கள் நிறையும் போதும்
       தப்பாம லவத ரிப்பேன்
              தரணி யில்நா னென்றபடி
அருமறைகள் அறிய மாட்டா
       அரும்பொருளே வருதல் வேண்டும்.
       அன்பு டன்நீ அப்போதும்
              திலகருரு அடைதல் வேண்டும்.       10

குறிப்புரை:-கருமம் - செயல்; செப்பு - சொல்லு.

44. தாதாபாய் நவரோஜி

நேற்றுதித்த தேசமெல்லாம் நிலைத்தபடி
              பலபேசி நிந்தை கூறி
       நின்றிடவே குன்றிடநாம் நெஞ்சுருகிப்
              பஞ்சையராய் நித்த மேங்க
வேற்றரசர் நேசரெல்லாம் வேடிக்கை
              பார்த்தவராய் விந்தை பேச
       வெட்கமதால் தலைகுனிந்து வெருண்டுமன
              மருண்டஎமை வெருளே லென்றும்
‘ஆற்றலுள்ள முன்னோர்கள் அவர்வழியில்
              பிறந்தநமக் கவதி யுண்டோ?
       அடைந்திடுவோம் சுயராஜ்யம்; அஞ்சாதீர்!‘
              எனமொழிந்தும் அன்பினாலே