136நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சரணங்கள்

ஆண்மை மறந்தவர்க்கும் ஆளும் திறமையுண்டோ?
அன்பைத் துறந்தவர்க்கும் இன்ப நிலையுண்டோ?
பான்மை அறிந்திருந்தும் மேன்மை வழியைவிட்டுப்
பற்பல எண்ணி எண்ணி அற்பத் தனத்திற்பட்டு.       (தீர்க்க)1

அன்பிற் குயிர்விடுதல் ஆண்மை யதுவேயாகும்;
ஆசை அதிகப்பட்டால் ஆளும் திறமைபோகும்;
துன்பம் சகித்துப்பெற்ற தூய்மை மிகுந்திடும்
துறவி உனக்குச்சொன்ன அறவுரை இகழ்ந்தனை.       (தீர்க்க)2

உண்மை யுறுதியின்றி உண்டாசு தந்தரம்?
உயர்ந்த ஒழுக்கமின்றி வேறுள்ள தந்திரம்
என்னென்ன செய்திடினும் ஏதும் பலித்திடுமோ?
என்னும் பொய் யாமொழியைச் சொன்ன பெருந்தவசி.       (தீர்க்க)3

குறிப்புரை:-பான்மை - தன்மை; அறவுரை - புத்திமதி.

78. நல்ல வழி

பல்லவி

நல்ல வழியிருக்க அல்லல் வழிநினைத்து
நாளும் அலைந்தாய் நெஞ்சமே!       (நல்ல)

அநுபல்லவி

தொல்லை முனிவரர்கள் சொல்லிய வழியது
சுதந்தர நாட்டிற்குச் சொல்லுதற் கெளியது.       (நல்ல)

சரணங்கள்

கடியும் புலிகரடி கொடிய மிருகமில்லை
கள்ளர்கள் பயமில்லை பள்ளம்மே டுள்ளதல்ல
குடியுங் கொலைகளவும் அடியும் வழிப்பறியும்
கொஞ்சமும் அதிலில்லை நெஞ்சமே நீசெல்ல       (நல்ல)1