புலவர் சிவ. கன்னியப்பன் 161

சரணங்கள்

அரசியல் சுதந்தரம் அடைந்தது பெரிதல்ல
ஆன்ம சுதந்தரத்தை அழித்துவிடவும் வல்ல
பரிசுடை மோகம் நம்மைப் பற்றிக் கொள்ளாதபடி
பரமார்த்த எண்ணங்கள் பழுதுபடாமல் காத்து       (உயிரை)1

அந்நிய நாடுகள்போல் அயலாரைச் சுரண்டிட
ஆதிக்கம் தேடுகின்ற நீதிக்குறை செய்யாமல்
இன்னுயிர் கொடுத்தேனும் இந்தியத் தாய்நாட்டின்
இணையற்ற நன்னெறியைத் துணைகொள்ளும் வழிகாட்டி.       (உயிரை)2

ஆண்சிங்கம் அதைப்போல ஆற்றல் வளரச்செய்தே
அத்துணை சக்தியையும் அன்பின் கிளரச்செய்து
வீண்சங்கம் உட்பகை யாவும் விளங்கச் செய்து
விஞ்ஞானத் தீமைநீக்க மெய்ஞ்ஞான வேள்விக்காக.       (உயிரை)3

110. ஏற்ற மருந்து

பல்லவி

சாந்தியைக் கொடுப்பது காந்தியின் திருப்பேர்
சந்ததமும் அதனைச் சிந்தனை செய்திடுவோம்

அநுபல்லவி

மாந்தருள் பகைமையை மதவெறிக் கொடுமையை
மாற்றி விடுவதற்கே ஏற்ற மருந்ததுவே       (சாந்தி)

சரணங்கள்

கோபத்தை அடக்கவும் குரோதத்தை ஒடுக்கவும்
குற்றத்தைத் தடுக்கவும் குணநலம் கொடுக்கவும்
பாபத்தை ஒதுக்கவும் பரமனைத் துதிக்கவும்
பயமற்று வாழ்ந்திடும் பரிசுத்தம் பலிக்கவும்.       (சாந்தி)1

சமதர்ம உணர்ச்சியின் சந்தோஷம் வளர்ந்திடும்
சாதி மதங்களென்னும் சழக்குகள் தளர்ந்திடும்

6 நா.க.பா.பூ.வெ.எ. 489