புலவர் சிவ. கன்னியப்பன் 171

சரணங்கள்

நாட்டைத் துறந்தவரும் வீட்டை மறந்தவரும்
       நானா விதம்பல தானம் புரிந்தவரும்
ஏட்டைத் தினம்புரட்டி எண்ணிப் படிப்பவரும்
       எல்லா விதத்திலும் நல்லோர் விழைந்திடும்       (சாந்தி)1

வேதங்கள் தேடுவதும் கீதங்கள் பாடுவதும்
       வேள்வி முயன்றதுவும் கேள்வி பயின்றதுவும்
காதம் பலநடக்கும் காவடி யாத்திரையும்
       கற்றவர் மற்றவரும் முற்றும் விரும்புகின்ற       (சாந்தி)2

முந்திநம் முன்னவர் நொந்து தவம்புரிந்து
       முற்றும் அறங்களினால் பெற்ற பெரும்பயனாம்
இந்திய நாட்டினுக்கே சொந்தப் பெருமைஎன்றே
       எந்தெந்த நாட்டவரும் வந்து பயிற்சிபெறும்.       (சாந்தி)3

124. ஆடு ராட்டே

பல்லவி

ஆடுராட்டே சுழன் றாடுராட்டே!

அநுபல்லவி

சுழன்று சுழன்று சுழன் றாடுராட்டே - இனிச்
சுகவாழ்வு வந்ததென்று ஆடுராட்டே!

சரணங்கள்

பாபம் குறையுமென்று ஆடுராட்டே - இனிப்
பயங்கள் மறையுமென்று ஆடுராட்டே
கோபம் குறையுமென்று ஆடுராட்டே - நல்ல
குணங்கள் மிகுந்ததென்று ஆடுராட்டே!       1

மேலான ஜாதியென்று மிகப்பேசி - மிக
மாறான காரியங்கள் செய்துவாழும்
மாலான ஜனங்களின் வஞ்சனை எல்லாம் - இனி
மாண்டு மடியுமென்று ஆடுராட்டே!       2