புலவர் சிவ. கன்னியப்பன் 181

சாதிமதக்கலகப் பேதம்வி டாதநீ
       தைரிய மடைவாயோ!
ஓதும் சமர்முனையில் ஏதும் கவலையின்றி
       உயிரதை விடுவாயோ!       (கதர்)2

சத்தியம் பேசவும் மெத்தப் பயந்திடும்நீ
       சண்டையிற் செய்வதென்ன?
சுத்தமும் வீரனைப்போல் யுத்தமே பேசுகிறார்
       சூதனு முய்வதுண்டோ?       (கதர்)3

உஷ்ணஜலம்படவும் கஷ்டம் பொறாதவர்
       உடன்கட்டை ஏறுவரோ!
இஷ்ட முனக்கிருந்தால் நஷ்டமில் லாவழி
       இதைவிடக் கூறுகிறேன்.       (கதர்)4

132. கதர்த்துணிவாங்கலையோ!

பல்லவி

கதர்த்துணி வாங்கலையோ - அம்மா!
கதர்த்துணி வாங்கலையோ - ஐயா!       (கதர்)

சரணங்கள்

ஏழைகள் நூற்றது; எளியவர் நெய்தது;
கூழும்இல் லாதவர் குறைபல தீர்ப்பது.       (கதர்)1

கன்னியர்நூற்றது; களைத்தவர் நெய்தது;
அன்னதா னப்பலன் அணிபவர்க் களிப்பது.       (கதர்)2

கூனர்கள்நெய்தது; குருடர்கள் நூற்றது;
மானமாய்ப் பிழைக்க மார்க்கம் தருவது.       (கதர்)3

தாழ்ந்தவர்நூற்றது; தளர்ந்தவர் நெய்தது;
வாழ்ந்திடும் உங்கட்கும் வாழ்த்துகள் சொல்வது       (கதர்)4